செவ்வாய், 18 ஜூன், 2013

சூர்யா, காஜல் அகர்வாலுக்கு விருது(


 
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கும் விழா ஐதராபாத்தில் நடந்தது.
இதில் தமிழில் சிறந்த நடிகராக சூர்யா தெரிவு செய்யப்பட்டார். மாற்றான் படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக அவரை தெரிவு செய்தனர்.
சிறந்த நடிகையாக காஜல் அகர்வால் தெரிவு செய்யப்பட்டார். இவர் துப்பாக்கி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தெரிவு செய்தனர்.
இதுபோல் தெலுங்கில் சிறந்த நடிகராக பவன் கல்யாண், சிறந்த நடிகையாக சமந்தாவும், சிறந்த வில்லன் நடிகராக சுதீப்பும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா விருதுகளை வழங்க, சூர்யாவும், காஜல் அகர்வாலும் மேடையில் ஏறி பெற்றுக் கொண்டனர்.
நாகர்ஜூனா, நித்யாமேனன் போன்றோரும் சிறந்த நடிகர், நடிகை விருதை பெற்றனர். விழாவையொட்டி நடிகர், நடிகைகள் நடனம் உட்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன,

                          

0 கருத்துகள்:

கருத்துரையிடுக