செவ்வாய், 18 ஜூன், 2013

ஹன்சிகாவால் ஆடிப் போன சமந்தா


ரசிகர்கள் மட்டுமின்றி, நாயகர்களாலும் அதிகம் விரும்பப்படும் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் ஹன்சிகா.
நாயகி என்ற பந்தாவும், ஏனோ தானோ என்றும் இல்லாமல் தனது முழுதிறமையையும் வெளிப்படுத்தி நடிப்பதால் இயக்குனர்களாலும் அதிகம் விரும்பப்படும் நாயகியாகி விட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், எந்த காட்சியாக இருந்தாலும் நான் முழு திருப்தி அடையும் வரை நடிப்பேன்.
அதற்காக ஓவர் ஆக்டிங் செய்ய மாட்டேன்.
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்துள்ளேன்.
சித்தார்த் எனக்கு ரொம்பவும் மேட்ச்சான ஜோடி. படத்தில் எங்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக வந்திருக்கிறது என கூறியுள்ளார்.
இதுமட்டுமல்லாமல் சீனை சொன்னதும் கமெரா முன்பு வந்து நிற்பவர், எந்தவித தயக்கமும் இல்லாமல் எள் என்றால் எண்ணெய்யாக நடிப்பை பொறிந்து தள்ளி வருகிறார் என்று இயக்குனர் சுந்தர்.சி புகழாரம் சூட்டியுள்ளார்.
ஏற்கனவே சித்தார்த்தும், சமந்தாவும் காதல் வானில் சிறகடித்து பறப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஹன்சிகாவின் இந்த அறிவிப்பு, சமந்தாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக