இன்றைய திகதியில் கொலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக் கிறார் ஹன்சிகா.
சமீபத்தில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டி ருக்கிறது.
அடுத்து சூர்யாவுடன் இணைந்துள்ள சிங்கம்2 படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தன்னுடன் பணியாற்றிய நாயகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.
தன்னுடைய வேலாயுதம் பட நாயகன் விஜய் சின்சியர் என்றும், சூர்யாவை சிங்கம் என்றும், எங்கேயும் காதல் நாயகன் ஜெயம் ரவி நாட்டி(குறும்புத்தனம்) என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சிம்பு எப்படிப்பட்டவர் என்ற கேள்விக்கு வாலு என்றும், சேட்டை நாயகன் ஆர்யா வேடிக்கையானவர் என்றும் பதில் அளித்துள்ளார்.
தன்னுடன் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் சந்தானத்தை பார்த்தாலே, அவருக்கு சிரிப்பு தான் வருமாம்.