இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள முதல் படம் கோச்சடையான்.
இந்தியாவில் முதல் 3டி படமான இப்படம் மோஷன் கேப்சரிங் என்ற தொழில் நுட்பத்தில் வெளியாக உள்ளது.
இதில் ரஜினியுடன், தீபிகா படுகோனே, சரத்குமார், ஆதி, ஷோபனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வருகிற மே மாதம் வெளியாகிறது. அதையடுத்து படத்தை ஜூலை மாதத்தில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான் என 5 மொழிகளில் தயாராகியுள்ள இப்படம் பல முக்கிய ஏரியாக்களுக்கு விற்பனையாகி விட்டது.
இந்நிலையில், கோச்சடையான் படத்தின் அமெரிக்க உரிமையும் தற்போது விற்பனையாகியுள்ளது.
மேலும் தெலுங்கில் விக்ரம சிங்ஹா என்ற பெயரில் வெளியாகும் கோச்சடையான் படத்தின் உரிமையை கணபதி பிலிம்ஸ் வாங்கியுள்ளதாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக