கொலிவுட்டில் விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தின் மூலம் அறிமுகமான தீக்ஷா சேத் நீண்ட இடைவேளைக்கு பின்பு மீண்டும் கொலிவுட்டிற்கு திரும்பியுள்ளார்.
ராஜபாட்டை படத்திற்கு பின்பு எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்தி வந்தார்.
தெலுங்கில் ரவி இயக்கத்தில் கோபிசந்த் ஜோடியாக நடித்த வான்டட் என்ற படம் கொலிவுட்டில் வேங்கை புலி என்ற பெயரில் மொழிமாற்றம் ஆகிறது.
வசதியான குடும்பத்தை சேர்ந்த கோபிசந்த் தீக்ஷாவை சந்திக்கிறார். அவரிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
அதை ஏற்க மறுக்கிறார் தீக்ஷா. ‘காதலுக்காக உயிரைவிடவும் தயார் என்று கோபி கூறுகிறார். அதற்கு தீக்ஷா, உயிரை விட வேண்டாம் 3 பேரின் உயிரை எடுக்க வேண்டும் என்கிறார்.
அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கோபி, காதலுக்காக 3 பேரை கொல்கிறார். எதற்காக அவர்களை தீக்ஷா கொலை செய்யச் சொன்னார் என்பதை படம் விளக்கும்.
இதில் பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் இப்படத்திற்கு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக