ஜோடியின் ரொமான்ஸ் ,தீயா வேலை செய்யணும் குமாரு படத்துக்காக நாயகன் சித்தார்த்- நாயகி ஹன்ஷிகா ஜோடியின் ரொமான்ஸ் பாடலை ஜப்பானில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.
நட்புக்காக 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் சிறிய வேடத்தில் கொலிவுட் நாயகன் விஷால் வருகிறார்.
அவருக்கே உரிய தோரணையில் படத்தின் காட்சியில் நடிப்பார். கொமெடியன் சந்தானம் படத்தில் லவ் குருவாக வந்து சிரிக்க வைப்பார்.
இந்தப்படத்தில் நீங்க நடிக்க வேண்டும் என்று விஷாலிடம் சொன்னதும் உடனே யோசிக்காமல் 'ஒ.கே' சொல்லி என்னை வியக்க வைத்தார்.
சென்னையில் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஏப்ரல் மாதம் ஜப்பானில் சித்தார்த்- ஹன்ஷிகா ஜோடி நடிக்கும் படத்தின் பாடல்களை படமாக்குகிறோம் என்கிறார் 'தீயா வேலை செய்யணும் குமாரு' பட இயக்குனர் சுந்தர்.சி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக