மலையாளப் படங்களில் முன்னணி நடிகையாக திகழும் ரீமா கல்லிங்கல், கொலிவுட்டில் பரத் ஜோடியாக யுவன் யுவாதி படத்தில் நடித்தார்.
மலையாள நடிகர், நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரள திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து உள்ளது.
இதனால் நடிகர், நடிகைகள் யாரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதோ, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோ இல்லை.
ஆனால் ரீமா கல்லிங்கல் இதை மீறி "மிடுக்கி" என்ற மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மலையாள நடிகர்கள் சித்திக், ஜெகதீஷ் ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர்.
தடை விதிக்கப்பட்டதும் அதில் இருந்து விலகினர். ஆனால் ரீமா கல்லிங்கல் மட்டும் தடையை பொருட்படுத்தாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து மலையாளப் படங்களுக்கு ரீமா கல்லிங்கலை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அதிரடி தடை உத்தரவு பிறப்பித்து உள்ளது.
நடிகர் சுரேஷ் கோபியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முடித்த பின்பே சினிமாவில் நடிப்பேன் என்று அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக