ஞாயிறு, 15 மார்ச், 2015

எல்லாம் அவன் செயல் என் வழி தனி வழி??

நடிகர் :ஆர்.கே,ராதாரவி, விவேக், அன்பாலயா பிரபாகரன், தம்பி ராமய்யா, சிங்கமுத்து, மதன்பாப், நடிகை :பூனம் கவுர், மீனாட்சி தீக்ஷித் ,ரோஜா, சீதா, இயக்குனர் :ஷாஜி கைலாஷ் இசை :ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு :
ராஜரத்னம்
கதையின் கரு: சமூக விரோதிகளை வேட்டையாடும் போலீஸ் அதிகாரி.
‘எல்லாம் அவன் செயல் படத்தை அடுத்து ஆர்.கே-ஷாஜி கைலாஷ் கூட்டணியில் வந்திருக்கும் படம். ஆர்.கே. ஒரு என்கவுன்டர் போலீஸ் அதிகாரி. சமூக விரோதிகளை அவர் களையெடுப்பதால் பகையை சம்பாதிக்கிறார். இந்த பகையால் பாசமுள்ள தாயை
 பறிகொடுக்கிறார். தாயை கொன்றவர்களை இவர் போட்டுத்தள்ளி விட்டு, சட்டத்தின் முன்பு குற்றவாளியாக நிற்கிறார். அதில் இருந்து அவர் விடுபட்டாரா, அவரை உருகி உருகி காதலிக்கும் முறைப்பெண் பூனம் கவுரின் காதல் என்ன ஆகிறது? என்பது படத்தின் மீதி கதை.

என்கவுன்டர் போலீஸ் அதிகாரியாக ஆர்.கே. மிடுக்குடனும், முறுக்குடனும் வந்து மிரட்டுகிறார். அழகான பூனம் கவுருடன் டூயட் பாடுகிறார்.

ஆர்.கே.யை சுற்றும் முறைப்பெண்ணாக பூனம் கவுர், கலர் கலரான உடைகளில் டூயட் பாடிவிட்டு போகிறார். இன்னொரு நாயகி மீனாட்சி தீட்சித் கையில் துப்பாக்கியை கொடுத்து விடுகிறார்கள்.

ராதாரவி, ராஜீவ்கிருஷ்ணா, ஆசிஷ் வித்யார்த்தி என வில்லன்கள் கூட்டம், பயமுறுத்துகிறது. அரசியல்வாதியாக வரும் ரோஜா கதாபாத்திரத்தில் தெலுங்கு வாசனை வீசினாலும், ரசிக்க வைக்கிறது.
தம்பிராமய்யாவும், சிங்கமுத்துவும் திருடர்களாக வந்து காமெடி கல்லா கட்டுகிறார்கள். ஆர்.கே.யின் அம்மாவாக வந்து சீதா அனுதாபத்தை அள்ளுகிறார். விசு, அஜய் ரத்னம், டி.பி.கஜேந்திரன், கராத்தே ராஜா ஆகியோர் கதாபாத்திரங்களாக மனதில் நிற்கிறார்கள்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், கவிஞர் வைரமுத்துவின் வரிகள் கவனம் பெறுகின்றன.
பரபர காட்சிகளில், கதாநாயகன்- வில்லன்கள் மோதல்கள்- துரத்தல்களில், மற்றும் ஜோர்டான் பாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் ராஜரத்னத்தின் உழைப்பு தெரிகிறது.
படத்தின் இறுதி காட்சிகளில் ஆர்.கே. பேசும் வசனங்களில், சாட்டையடி. அரசின் நலத்திட்டங்களை தனியாரிடம் காண்டிராக்ட் விடாமல், வெளிநாடுகளைப் போல்
 ராணுவம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற வி.பிரபாகரின் வசன வரிகள் தியேட்டரில் வரவேற்பை பெறுகின்றன.
இடைவேளை வரை டுமீல்... டுமீல்... என்று ஒரே துப்பாக்கி சத்தம். இடைவேளைக்குப்பின், கதை வேகமாக நகர்கிறது. போலீசுக்கான விறைப்பு குறையாத கதையால்-அதை சொன்ன விதத்தால் நிமிர்ந்து உட்கார வைக்கிறார், டைரக்டர் ஷாஜி கைலாஷ்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக