தமிழ் சினிமாவில் கவுண்டமணி, செந்தில், வடிவேலுக்கு பிறகு காமெடியில் கலக்கி வருப்பவர் சந்தானம். இவருடைய டைமிங் காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தன. தற்போது காமெடியில் இருந்து மாறுப்பட்டு ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரைப்பற்றிய தகவல் ஒன்று வெளிவந்திருக்கிறது. அதாவது நடிகர் சந்தானம் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாராம். இதை அவரே தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனது 35–வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் சந்தானம். பிறகு ஆட்டோவில் கிரிவலம் சென்ற அவர் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும் இறங்கி தரிசனம் செய்தார்.
அப்போது முதியவர்களுக்கு அன்னதானம், போர்வை வழங்கினார். பிறகு பேட்டியளித்த சந்தானம், எனது பிறந்த நாளை முன்னிட்டு கோவிலுக்கு வந்தேன். இதுவரை 200 படங்கள் நடித்துள்ளேன். தற்போது 5 படங்களில் நடித்து வருகிறேன். அதில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். எனது ரசிகர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று கூறினார். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே 200 படங்களில் நடித்துள்ள சந்தானம் கூடிய விரைவில் 1000 படங்கள் நடித்து சாதனை புரிவாரா..? என்று பொருந்திருந்து பார்ப்போம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக