சனி, 30 ஆகஸ்ட், 2014

ஜோதிடர் சொன்னது பலித்து விட்டது: ஹன்சிகா பெருமிதம்

 தமிழ், தெலுங்கு பட உலகில் ஹன்சிகா முன்னணி நடிகையாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கிறார். சம்பளமும் கணிசமாக வாங்குகிறார். இவ்வளவு பெரிய நிலைமைக்கு வருவேன் என்று எனக்கு முன்பே தெரியும் என்று ஹன்சிகா தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு.. சிறு வயதில் நான் ஜோதிடம் பார்த்தேன். எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பேன் என்றும் ஜோதிடர் கூறினார். அது பலித்து விட்டது. இப்போது பிரபல நடிகையாகி விட்டேன்.
  
நாடி ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் அதில்கணித்து கூறுகிறார்களாம். எனக்கும் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. விரைவில் நாடி ஜோதிடரை சந்திப்பேன் என்று அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .

 

சனி, 31 மே, 2014

சுவிஸ் 2014 குரல்இசைப்பாடல் வேலாயினி.அமரானந்தன்


இசை பயின்று வரும் மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் தனிக்களம் அமைத்து அவர்களின் கலை சிறக்க உழைத்த அனைவரும் நிமிர்ந்து நிற்க கூடிய அளவுக்கு இந்த நிகழ்வில் பாடிய சுவிஸ் சங்கீதாலயம் இசைக்குயில் 2014 தனிப்பாடல்
மேற்பிரிவு வேலயினி.அமரானந்தன்

எமது இளைஞர்களிடம் இப்படித் திறமை இருக்குமா? என்ற அளவுக்கு இன்றய இளையோர் கலை வளத்தில் உயர்ந்து நிற்கின்றனர் அந்த வகையில் இவர் பெற்றோருக்கும் இவர் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள் இப்படி பிரமாண்டமான சிறந்த நிகழ்வை நடத்திய சுவிஸ் சங்கீதாலயம் இசைக்குயில் 2014 குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
கலை வளம் மிளிர
கலைஞர்கள் திகழ
புதுக்களம் கொடுத்து
ஈழவர் குரல்பாட்டு
கேட்கவைத்து
காதுகளில் ரீங்காரம் இடும்
பாடல் குயில்களே
பணி தொடர எமது வாழ்த்துக்கள்

ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

ஒரு வாரம் சிகிச்சை, ரூ.6 லட்சம் கட்டணம்: அரங்கேறிய !!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சையளித்து ரூ.6 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
ஆனால் ஓரிரு நாட்களிலேயே அவர் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து பொலிசில் பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரில், கடந்த ஒருவாரமாக எங்களது பெண்ணின் உடலை காட்டாமலே வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிப்பதாக கூறி வந்தனர்.
பின்னர் ஒருவாரம் கழித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிகிச்சை செலவாக ரூ.6 லட்சம் கட்ட வேண்டும் என்றும் பில் கொடுத்தனர். கடந்த ஒருவாரமாக அவரது உடலை காட்டாமல் மறைத்து வைத்து சிகிச்சை அளித்ததன் மூலம் இறந்து போன உடலுக்குத்தான் சிகிச்சை அளித்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து போபால் பொலிசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் அங்கிருந்த 4 மருத்துவர்கள் தலைமறைவாகினர்.
தற்போது அவர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ஞாயிறு, 30 மார்ச், 2014

பவதாரணி அப்பாவின் ரசிகர் மன்றத்துக்கு தலைவராகிறார்


இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம் விரும்பிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் “இளையராஜா ரசிகர்கள் மன்றம்” (ILAYARAJA FANS CLUB) தொடங்க உள்ளது. இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி , டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் இந்த மன்றம் ஆரம்பமாக உள்ளது. இதில் கார்த்திக் ராஜாவுக்கு நிறைய பணிகள் இருப்பதால் அவருக்கு பதில் இளையராஜா மகள் பவதாரணி தலைவராக செயல்பட உள்ளார். ஏப்ரல் 5ந் தேதி மதுரை தமுக்கம் மைதனாத்தில் நடக்கும் விழாவில் இந்த மன்றம் துவங்கவுள்ளது. இதுகுறித்து பவதாரணி கூறுகையில், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்ய உள்ளோம். தற்போது வரை சுமார் 1கோடிக்கும் அதிகமானோர் அப்பாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளனர் என்று கூறினார்.

சனி, 22 மார்ச், 2014

சசிகுமார், வரலட்சுமியை கிழி, கிழி, கிழிக்கும் பாலா

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை.
இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே.
வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் படத்திற்காக சசிகுமார் தனது கெட்டப்பை மாற்ற, தாடியை எல்லாம் எடுத்து பென்சில் மீசை போன்று வைத்திருக்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியையும் அவர் மேற்கொண்டிருக்கிறார்.
இப்படத்தினை பாலா மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து தயாரிக்க இருக்கிறார்கள்

சனி, 15 மார்ச், 2014

காதல் லீலையில் கோஹ்லி- அனுஷ்கா சர்மா

கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது அம்பலமாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

இருவரும் இணைந்து ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் நடித்த போது தான், நெருக்கம் ஏற்பட்டதாம்.

இதனை தொடர்ந்து ஒன்றாகவே பல இடங்களுக்கும் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார், ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோஹ்லி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றுள்ளதாக தெரிகிறது.

சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனராம்.

சனி, 1 மார்ச், 2014

காதலனை அறிவிக்க நாள் பார்க்கும் த்ரிஷா



காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்று கூறியுள்ளார் த்ரிஷா. திரையுலகிற்கு வந்து 10 வருடங்கள் ஆனாலும் இன்றுவரை ரசகிர்கள் மத்தியில் அழகு பதுமையாக வலம் வருகிறார் த்ரிஷா.
இதற்கிடையில், காதல் கிசுகிசுக்களுக்கு வேறு ப
ஞ்சமில்லை, இந்நிலையில் தன்னுடைய காதல் பற்றி த்ரிஷா கூறுகையில், சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. எந்தவொரு உறவும் குறிப்பிட்ட நேரத்தில்தான் அமையும். அதுபோல் காதலும் சரியான நேரத்தில் வரும்.
அந்தநாள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. சரியான நேரம் வந்ததும் கண்டிப்பாக காதல் பற்றி வெளிப்படையாக பதில் சொல்வேன், எனது காதலன் யார் என்பதை கூறுவேன் என்றுகூறியுள்ளார்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஐஸ்வர்யாவால் கொந்தளித்த பி.வாசு


விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியதுவிஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி, பின்பு அதனைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பாடலை படமாக்கினார்கள்.தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியிருக்கிறது. சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என அறிவித்து இருக்கிறது படக்குழு.இப்படத்தில் வரும் ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்ட படக்குழு, அங்கு தெலுங்கானா பிரச்சனை நடைபெற்ற வருவதால் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஜெயில் செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.ஐங்கரன் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. -

சனி, 15 பிப்ரவரி, 2014

சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் டீம்

இது கதிர்வேலன் காதல்’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 14தேதி காதலர் தினத்தில் வெளியாக உள்ளது.
இப் படத்துக்கு 320 திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் சந்தோஷத்தில் மிதக்கிறது இது கதிர்வேலன் காதல் டீம் சுந்தரபாண்டியன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் இது கதிர்வேலன் காதல்.
உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா முதன் முதலாக இணைந்து நடித்துள்ள இப்படம் யு சான்றிதழ் பெற்று குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வெற்றிபெற்ற நிலையில் இப்படம் ஆரோ 11.1, டால்ஃபி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளிவருவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

முகிலே முகிலே பாடல் “காணொளி”

இயற்கையையின் அழகை எடுத்துரைக்கும் இந்தப்பாடல் இனிமை ததும்பும் பாடலாக உள்ளது. எம் இனத்தின் கலைவடிவங்களை மிளிர முன்மாதியாக உள்ளது .இதுபோன்ற ஆக்கங்களுக்கு கரம் கொடுப்போம்.
எம்மவர் கலைவளர-எம்
 நிலை உயரும்
 நிலை உயர
 வளம் பெருகும்
 நம்மவர் கலைக்காய்
 கரம் கொடுப்போம் நன்றி