சனி, 15 மார்ச், 2014

காதல் லீலையில் கோஹ்லி- அனுஷ்கா சர்மா

கிரிக்கெட் வீரர் வீராட் கோஹ்லியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் கடற்கரையில் குத்தாட்டம் போட்டது அம்பலமாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான வீராட் கோஹ்லியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

இருவரும் இணைந்து ஷாம்பூ விளம்பரம் ஒன்றில் நடித்த போது தான், நெருக்கம் ஏற்பட்டதாம்.

இதனை தொடர்ந்து ஒன்றாகவே பல இடங்களுக்கும் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அனுஷ்கா சர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார், ஆசிய கிண்ணப் போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோஹ்லி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றுள்ளதாக தெரிகிறது.

சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனராம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக