இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள், நலம் விரும்பிகள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் வகையில் “இளையராஜா ரசிகர்கள் மன்றம்” (ILAYARAJA FANS CLUB) தொடங்க உள்ளது. இளையராஜாவின் அங்கீகாரத்துடன் அவரது மகன் கார்த்திக்ராஜா தலைமையில், தயாரிப்பாளர் பி.வேலுச்சாமி , டைரக்டர் ரத்னகுமார் ஆகியோரை மேனேஜிங் டிரஸ்டிகளாக கொண்டு அரசாங்க அங்கீகாரத்துடன் இந்த மன்றம் ஆரம்பமாக உள்ளது. இதில் கார்த்திக் ராஜாவுக்கு நிறைய பணிகள் இருப்பதால் அவருக்கு பதில் இளையராஜா மகள் பவதாரணி தலைவராக செயல்பட உள்ளார். ஏப்ரல் 5ந் தேதி மதுரை தமுக்கம் மைதனாத்தில் நடக்கும் விழாவில் இந்த மன்றம் துவங்கவுள்ளது. இதுகுறித்து பவதாரணி கூறுகையில், அப்பாவின் ரசிகர் மன்றம் மூலம் நிறைய நல்ல காரியங்களை செய்ய உள்ளோம். தற்போது வரை சுமார் 1கோடிக்கும் அதிகமானோர் அப்பாவின் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளனர் என்று கூறினார்.