விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியதுவிஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி, பின்பு அதனைத் தொடர்ந்து சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பாடலை படமாக்கினார்கள்.தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் இன்று தொடங்கியிருக்கிறது. சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என அறிவித்து இருக்கிறது படக்குழு.இப்படத்தில் வரும் ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையில் படமாக்க திட்டமிட்ட படக்குழு, அங்கு தெலுங்கானா பிரச்சனை நடைபெற்ற வருவதால் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் ஜெயில் செட் போட்டு அங்கு படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.ஐங்கரன் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. -