சனி, 26 அக்டோபர், 2013

சரணின் ‘ஆரண்ய காண்டம்’



S.P.Saran's filmஎஸ்.பி.பி. சரண் ஒரே நேரத்தில் இரண்டு படங்களைத் தயாரிக்கிறார். இதில் ஒரு படத்தில் பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் முதன் முதலாக தமிழில் அறிமுகமாகிறார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி.சரண் படத்தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இவர் தயாரித்த சென்னை-28 படம் பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு சரோஜா படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் படத்தயாரிப்பை கொஞ்ச நாட்களுக்குத் தள்ளி வைத்திருந்தார். இப்போது

 ‘குங்குமப்பூவே கொஞ்சும்புறாவே’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எஸ்.பி.பி.சரண்.

படத்தின் பெயர் ‘ஆரண்ய காண்டம்’. இந்தப் படத்தின் மூலம் ஜாக்கி ஷெரப் முதன்முதலில் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்தப் படத்தை தியாகராஜன் குமாரராஜா என்பவர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பல விளம்பரப் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தீபாவளிக்கு ‘ஜில்லா’ டீசர்!!!


ஜில்லா திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவிற்கு வந்தாச்சி… பாடல்கள் மற்றும் ஒரு ஆக்‌ஷன் ப்ளாக் மாத்திரம் பெண்டிங்க் இருக்கிறதாம். நேசன் இயக்கும் இத்திரைப்படத்தில் விஜய், காஜல் அகர்வால், சந்தானம் உட்பட பலர் நடிக்கிறார்கள்.. பொங்கலுக்கு வெளிவர இருக்கும் இத்திரைப்படத்தின் டீசரை வருகிற 2ம் தேதி தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். தீபாவளி அன்று ஜில்லா திரைப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது என்கிற தகவல் விஜய் ரசிகர்களை உற்சாகமாக்கியிருக்கிறது.

வருட இறுதியில் அல்லது வருட தொடக்கத்தில் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என முணுமுணுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!!

வெள்ளி, 11 அக்டோபர், 2013

அக்ஷய்குமாருடன் 'ரமணா'படத்தில் ஜோடி சேர அமலாபால் மறுப்பு


 ரமணா’ படம் தமிழில் 2002–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இதில் விஜயகாந்த், சிம்ரன் நடித்து இருந்தனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.


விஜயகாந்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க அமலாபாலை தேர்வு செய்தனர். அமலாபாலும் இந்தியில் அறிமுகமாக விருப்பமாக இருந்தார். ஆனால் அமலாபாலிடம் தற்போது கால்ஷீட் இல்லை. எனவே நடிக்க இயலாது என மறுத்து விட்டார்.

  அமலாபால் கைவசம் தமிழ், தெலுங்கில் 6 படங்கள் உள்ளன. இந்த வருடம் புதுப்படங்களுக்கு கால்ஷீட் கொடுக்க அவரிடம் தேதி இல்லை. எனவே அக்ஷய்குமார் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.