இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் இறுதிகட்ட பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றொரு புறம் ஈடுபட்டுள்ளதாக
கூறப்படுகிறது
இந்த படத்திற்காக ஏற்கனவே விஜய் ஒரு பாடலை பாடி முடித்துவிட்ட நிலையில் இன்னொரு பாடலை அவர் விரைவில் பாடவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் மகளாக நடிக்கும் மீனாவின் மகளுக்கும் ஒரு பாடல் இருப்பதாகவும், அந்த பாடலை
சமீபத்தில்
ரிலீஸான 'சைவம்' படத்தில் ஒரு பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்ற உன்னிகிருஷ்ணன் மகள் உத்தாரா பாடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
'சைவம்' படத்தில் தேசிய விருது பெற்றது போலவே இந்த படத்தின் பாடலுக்காகவும் உத்தாரா தேசிய விருது பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.