புதன், 26 ஆகஸ்ட், 2015

ஈழத்து நடிகை திவ்யாவின் துணிச்சல்! காணொளி இணைப்பு

உண்மையில் அந்த காணொளி யை  பார்த்து வியந்து போனேன். இந்தப் பிரச்சனைக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

தமிழ்நாட்டு சினிமாவின் நடிகைகள் சம்பந்தமான நிர்வாண ஒளிப்படங்கள், காணொளிகள் வந்திருக்கின்றன. அவைகளில் பெரும்பாலானவை போலியானவை.
ஆயினும் சில உண்மையான ஒளிப்படங்களும் வந்திருக்கின்றன. அண்மையில் நடிகை வசுந்தராவின் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இப்படி படங்கள் வெளியான நேரங்களில் எல்லாம் இந்த நடிகைகள் செய்வது ஒன்றைத்தான். ‘அது என்னுடைய படம் இல்லை, கணணியில் ஒட்ட வைத்த படம்’ என்று ஒரேயடியாக சாதித்து விடுவார்கள்.
இப்படியான பிரச்சனைகளில் இருந்து ஒடி ஒளிந்த நடிகைகளைத்தான் பார்த்திருக்கிறேன். இதை சரியான முறையில் எதிர்கொண்ட நடிகைகளை இதுவரை கண்டதில்லை.
ஈழத்து நடிகை திவ்யா இதை சரியான முறையில் எதிர்கொண்டிருக்கிறார் என்று சொல்வேன். இந்த சமூகத்தின் மீது அவர் காறி உமிழ்ந்திருக்கிறார்.
திவ்யா ஓடி ஒளியவில்லை. ‘அது தன்னுடைய கைத்தொலைபேசயில் எடுத்ததுதான், திருத்தக் கொடுத்த இடத்தில் சிலர் அதை வெளியிட்டு விட்டார்கள்’ என்று வெகு அலட்சியமாக அறிவித்து விட்டார்.

தனது காணொளியை வைத்து சில ஊடகங்கள் சக கலைஞர்களை இழிவுபடுத்தியதற்காக, கலைஞர்களிடமும் பொது மக்களிடமும் மன்னிப்பும் கோரியிருக்கிறார்.
தன்னைப் பற்றி கேவலமாக எழுதி, அவர்கள் தங்களையே கேவலப்படுத்துகிறார்கள் என்றும் நான் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் சாட்டையடியாக பதில் கொடுத்திருக்கிறார்.

அந்த காணொளி முழுதும், அவர் சக கலைஞர்கள் மீது பழி சுமத்தப்பட்டதற்கே விளக்கம் கொடுக்க முனைகிறார். தன்னுடைய வீடியோ பற்றி அவர் அதிகம் பேசவில்லை.

இதை ஒரு இளம் பெண்ணின் அசட்டுத் துணிச்சல் என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த சமூகத்தின் பெண் பற்றியதும், நிர்வாணம் பற்றியதுமான பார்வை அலட்சியப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்கின்ற ஆழமான புரிதல் அவருக்கு இருப்பதாகவே நான் நம்புகின்றேன்.
அவருடைய துணிச்சலுக்கு தலை வணங்குகின்றேன்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>