சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படம் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி,
விஜய், அஜித், சூர்யா தனுஷ், சிம்பு, ஆர்யா என அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். தமிழைப்போலவே
தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். நயன்தாராவுடன் எப்படியாவது டூயட் பாட வேண்டுமென்று துடியாய் துடித்துக்கொண்டு இருக்கின்றனர் பல இளவட்ட ஹீரோக்கள். தற்போது இருக்கும் ஹீரோக்களின் ஃபேவரட் ஹீரோயின் யார் என்றால் அது நயன்தாரா தான்.
அந்த அளவிற்கு அழகும், இவருடைய மார்கெட்டும் உச்சத்தில் இருக்கிறது. தற்போது நடிக்க வந்து 10 ஆண்டுகளுக்கு பிறகும்கூட முன்வரிசை ஹீரோக்களுக்கு ஜோடியாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். இதனால் நயன்தாராவை தமிழ் சினிமாவின்
நம்பர் 1 கதாநாயகியாக கூறி வருகின்றனர். இது சமீபத்தில் நயன்தாராவின் காதில் விழுந்தால் உடனே சொன்னவர்களை அழைத்து, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. கோலிவுட்டில் நான் மட்டுமில்லை. எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள். எல்லா நடிகைகளுமே நம்பர் 1 தான். வெற்றி தோல்வியை அனைவருமே சந்திக்கிறோம்.
அதனால், சீனியாரிட்டியை கருத்தில் கொண்டு என்னை நம்பர்1 நடிகை என்று சொல்ல வேண்டாம். கோலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் நானும் ஒருத்தி. இங்கே யாருக்கும் எதுவும்
நிரந்தரமில்லை என்று சொல்கிறார் நயன்தாரா. நயன்தாரா தற்போது உதயநிதியுடன் நண்பேன்டா, ஜெயம் ரவியுடன் தனி ஒருவன், 5 வயது குழந்தைக்கு தாயாக மிட் நைட் எக்ஸ்பிரஸ், விஜய் சேதுபதியுடன் நானும் ரெளடிதான், சூர்யாவுடன் மாஸ், சிம்புவுடன் இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.