சனி, 30 ஆகஸ்ட், 2014

ஜோதிடர் சொன்னது பலித்து விட்டது: ஹன்சிகா பெருமிதம்

 தமிழ், தெலுங்கு பட உலகில் ஹன்சிகா முன்னணி நடிகையாக இருக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்கிறார். சம்பளமும் கணிசமாக வாங்குகிறார். இவ்வளவு பெரிய நிலைமைக்கு வருவேன் என்று எனக்கு முன்பே தெரியும் என்று ஹன்சிகா தெரிவித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு.. சிறு வயதில் நான் ஜோதிடம் பார்த்தேன். எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பேன் என்றும் ஜோதிடர் கூறினார். அது பலித்து விட்டது. இப்போது பிரபல நடிகையாகி விட்டேன்.
  
நாடி ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் அதில்கணித்து கூறுகிறார்களாம். எனக்கும் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. விரைவில் நாடி ஜோதிடரை சந்திப்பேன் என்று அவர் கூறினார்.

இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் .