இசை பயின்று வரும் மாணவர்களுக்கு சுவிஸ் நாட்டில் தனிக்களம் அமைத்து அவர்களின் கலை சிறக்க உழைத்த அனைவரும் நிமிர்ந்து நிற்க கூடிய அளவுக்கு இந்த நிகழ்வில் பாடிய சுவிஸ் சங்கீதாலயம் இசைக்குயில் 2014 தனிப்பாடல்
மேற்பிரிவு வேலயினி.அமரானந்தன்
எமது இளைஞர்களிடம் இப்படித் திறமை இருக்குமா? என்ற அளவுக்கு இன்றய இளையோர் கலை வளத்தில் உயர்ந்து நிற்கின்றனர் அந்த வகையில் இவர் பெற்றோருக்கும் இவர் ஆசிரியருக்கும் வாழ்த்துக்கள் இப்படி பிரமாண்டமான சிறந்த நிகழ்வை நடத்திய சுவிஸ் சங்கீதாலயம் இசைக்குயில் 2014 குழுவினருக்கும் வாழ்த்துக்கள்
கலை வளம் மிளிர
கலைஞர்கள் திகழ
புதுக்களம் கொடுத்து
ஈழவர் குரல்பாட்டு
கேட்கவைத்து
காதுகளில் ரீங்காரம் இடும்
பாடல் குயில்களே
பணி தொடர எமது வாழ்த்துக்கள்