வெள்ளி, 4 டிசம்பர், 2020

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகை நதியாவின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர் நடிகை நதியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் அதிக
 படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் அவரது நடிப்பை பாராட்டும் அளவிற்கு நிறைய படங்கள் நடித்திருக்கிறார். எல்லோரும் இவரிடம் கேட்கும் ஒரே கேள்வி எப்படி இந்த வயதிலும் இவ்வளவ அழகாக உள்ளீர்கள் 
என்பது தான்.
அவரும் சந்தோஷமாக இருந்தால் அழகாக தான் தெரிவோம் என கூறுவார். தற்போது இவர் 1986ம் ஆண்டு பிரபல கேலண்டர் படத்திற்காக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதை அவரே தனது டுவிட்டரில் தற்போது வெளியிட்டுள்ளார். இதோ அந்த நிழல்படங்கள்  இணைப்பு. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>




சனி, 28 ஏப்ரல், 2018

கொழும்பிற்கு படையெடுத்த தென்னிந்திய திரை நட்சத்திரங்கள்

தென்னிந்திய நடிககை ரம்யா நபீசன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.இதில்,விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற பல்வேறு கலைஞர்கள் மற்றும் நடிகைககள்
 இலங்கை வந்துள்ளனர்.
கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, அவர்கள் வருகை தந்துள்ளனர்.விஜய் ரிவி புகழ் பிரியங்கா, மானாட மயிலாட புகழ் சுவேதா ஆகியோர் இன்றைய கட்டுநாயக்க விமான நிலையத்தை 
வந்தடைந்தனர்.
அண்மைக்காலமாக தொலைக்காட்சியே கதியெனக் கிடக்கும் சில இலங்கை சினிமா வெறியர்கள் இவர்களை வரவேற்க கொழும்பு மாநகரில் ஒன்று திரண்டதாகவும் அவர்களுடன் செல்பி எடுக்க போட்டி போட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





திங்கள், 26 செப்டம்பர், 2016

“அகத்தீ” “இரு கில்லாடிகள்” 02.10.16 திரையிடப்படுகின்றது !

லண்டனில் “அகத்தீ” திரைப்படமும் “இரு கில்லாடிகள்” திரைப்படமும் 02/10/2016 ஞாயிறு தினம் Harrow-Safari திரையரங்கில் பிற்பகல் 01.00 மணிக்கு
திரையிடப் படுகின்றது!
அமோக ஆதரவு தந்துகொண்டிருக்கும் லண்டன்
வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
நுழைவுச்சீட்டுகள் வேகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன!
அன்போடு இயக்குனர்,தயாரிப்பாளர்:
“டென்மார்க் சண்”
நம்மவர் திரைத்துறையை நாமே வளர்த்தெடுப்போம் வாருங்கள் உறவுகளே!
என்றும் தமிழோடும்,கலையோடும்,பணிவோடும்…
வளர்கிறது… எமது திரையுலகம்…
வாழ்த்துவோம்…வரவேற்போம்…
ஆதரவு வழங்கி அகிலம் போற்றவைப்போம்…
“அசோத்ரா கலைஞர்கள் சுற்றுக்கு 
நன்றிகள் “
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

தனுவின் எழுத்தில் தயாரிப்பில் பனி தூவும் என்காதல்

இத்தாலி தனுவின்  பனி தூவும் என்காதல் பனித்துளியே நீ தானா
நேரங்கள் கலையாத கடிகார முள் தானா
என் சோலை வனம் எங்கும் உன் முத்தம் தூவாதோ
என் சாலை மலர் எல்லாம் பூஞ்சாறல் அடிக்காதோ
தாமரை இதழ் மேலே வாழுவேன் நீர் போலே
நதியிலே விழும் நிலவாய் கரைகிறேன் உன் மேலே
அடி காதல் இது தானா….
எந்தன் வானம் நீ தானா….
என்ற வரிகளோடுசெல்லும்பாடல் எமது கலைஞர்களை இதைத்து தனுஅவர்கள் தன் ஆற்றல் உள்ள வரிகளுடன் பாடலைத்தயாரித்துள்ளதுடன்  எமது மண்மணம்வீசும் கலைஞர்கள் இணைவை உருவாக்கி வெளிவந்துள்ள இந்தப்பாடல் பார்வைக்காய் இணைக்கின்றோம்
 காணொளிப்பாடல்  இணைப்பு.

செவ்வாய், 12 ஜூலை, 2016

ஒரு திரைப்படத்துக்கு உலகிலேயே நடக்கும் புதிய புரொமோஷன் – கபாலி டா !!!

ரஜினியின் கபாலி படத்திற்கு அண்மையில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. அதோடு படமும் ஜுலை 22ம் தேதி சோலோவாக திரைக்கு வர இருக்கிறது.
ஏர் ஆசியா, ஃபைவ் ஸ்டார் சாக்லேட், ஏர்டெல் ஆகியவை கபாலி படத்துக்கு செய்த புதிய புரொமோஷன்கள். தற்போது இன்னொரு வித்தியாசமான புரமோஷனும் இணைந்துள்ளது.
கபாலி என்ற பெயரில் தற்போது மாரத்தான் போட்டி ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி மலேசியாவில் உள்ள SEPANG INTERNATIONAL CIRCUIT என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி 
நடக்க இருக்கிறது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

தேசிய விருது பெற்ற பாடகி.விஜய் மகளுக்கு குரல் கொடுக்கின்றார்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் இறுதிகட்ட பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றொரு புறம் ஈடுபட்டுள்ளதாக
 கூறப்படுகிறது
இந்த படத்திற்காக ஏற்கனவே விஜய் ஒரு பாடலை பாடி முடித்துவிட்ட நிலையில் இன்னொரு பாடலை அவர் விரைவில் பாடவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் மகளாக நடிக்கும் மீனாவின் மகளுக்கும் ஒரு பாடல் இருப்பதாகவும், அந்த பாடலை 
சமீபத்தில்
 ரிலீஸான 'சைவம்' படத்தில் ஒரு பாடலை பாடியதற்காக தேசிய விருது பெற்ற உன்னிகிருஷ்ணன் மகள் உத்தாரா பாடவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
'சைவம்' படத்தில் தேசிய விருது பெற்றது போலவே இந்த படத்தின் பாடலுக்காகவும் உத்தாரா தேசிய விருது பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 2 அக்டோபர், 2015

சண்டியன்” திரைப்படத்தை கவிமாறன் சிவா “இயக்கி வருகிறார்

ஈழ சினிமாவில் அக்சன் படங்கள் மூலம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து தடம் பதித்து வரும் இயக்குனர் கவிமாறன் சிவா தனது மூன்றாவது திரைப்படமான “சண்டியன் திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் தற்போது விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்,
இந்த திரைப்படத்தின் முதல் பார்வை தற்ப்போது உத்தியோகபூர்வமாக வெளியாகி உள்ளது 
“சண்டியன் “திரைப்பட குழுவினருக்கு எமது வாழ்த்துக்கள் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>